Tuesday, December 2, 2008

கிரடிட் கார்டு கடன்கள்

சமீப காலம் வரை பல இந்திய வங்கிகள் யார் கேட்டாலும் கிரடிட் கார்டுகள் கொடுத்தார்கள். இளைஞர் சமுதாயம் நாளைய தினத்தைப் பற்றி கவலைப்படாமல் கிரடிட் கார்டுகளை உபயோகித்து புத்தம் புதிய செல் போன்களை வாங்கியது. வருடத்துக்கு ஒரு முறை செல் போனை மாற்றுவது ஃபேஷனாகி விட்டது. கால் சென்டர் கலாசாரம் கிரடிட் கார்டுகளின் உபயோகம் அசுர வேகத்தில் இந்தியாவில் வளர விதையிட்டது.

இன்று அதே கிரடிட் கார்டு கலாசாரம் கார்டுகளை வாங்கியவர்களையும் கொடுத்தவர்களையும் பயமுறுத்துகிறது. இந்தியாவில் மூன்று கோடி கிரடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ரூபாய்.56,000 கோடிக்கு கிரடிட் கார்டுகளின் மூலம் மக்கள் பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். இதன் மூலம் தங்களுக்கு அதிக கமிஷன் கிடைத்ததால் சந்தோஷப்பட்ட வங்கிகள், தாங்கள் கொடுத்த கிரடிட் திரும்ப வராததால் நொந்து போயிருக்கின்றன.

இவ்வளவு நாட்கள் வேடிக்கை பார்த்துவிட்டு "வங்கிகள் தாறுமாறாக கிரடிட் கார்டுகள் கொடுத்து விட்டன" என்று பங்குசந்தை/பொருளாதார நிபுணர்கள் இப்போது வங்கிகளை குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவில் திரும்ப வராத கிரடிட் கார்டு கடனின் விகிதம் தற்போது 9%. இது 15%க்கு போகும் என்று Crisil கணித்திருக்கிறது.

மும்பையில் கிரடிட் கார்டு கடனால் கஷ்டப்பட்ட ஒரு குடும்பம் தற்கொலை செய்து கொண்டது.

கிரடிட் கார்டு கடன்களிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர்களுக்கு மும்பையில் உள்ளஅபய் கிரடிட் கவுன்சிலிங் சென்டர் ஆலோசனை கொடுக்கிறது. 

No comments: